அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் காலமானார்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் தனது 94வது வயதில் காலமாகியுள்ளார்.

கடந்த 1989-93 காலகட்டத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ். இவரது காலத்தில் ஈராக்கின் ஜனாதிபதியாக சதாம் உசேன் பனிப்போர் நிலவியது.

அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த இவரது மகன் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்-யும், கடந்த 2001-09ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக இன்று மரணமடைந்ததாக புஷ்ஷின் குடும்ப தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Getty Images

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers