பள்ளி மாணவனுடன் நெருக்கமாக இருந்த 24 வயது பெண் ஆசிரியர்! தண்டனை என்ன தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பள்ளி மாணவனுடன் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்படும் பெண் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமாவில் கடந்த புதன் கிழமை இரவு Natasha Patronsky என்ற 24 வயது பெண் ஆசிரியரை பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்த பெண் பள்ளி மாணவனுடன் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Natasha Patronsky அலபமாவில் இருக்கும் Sidney Lanier மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிரியராக சேர்ந்துள்ளார்.

ஆசிரியராக இருந்த இவர் கடந்த 8-ஆம் திகதி அங்கிருந்த மாணவர்களில் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவருடன் உறவு வைத்ததாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்துவதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் மீது குற்றம் மட்டும் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers