பேஸ்புக் நேரலையில் குழந்தையை கொன்று குளிர்சாதன பெட்டியில் அடைத்த தாய்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தையை கொலை செய்து துர்நாற்றம் தாங்க முடியாது என்பதால் குளிர்சாதனை பெட்டியில் அடைத்து வைத்த தாய், தற்போது சிறையில் இருந்து வெளிவர பிணைத்தொகையை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அலபாமாவில் உள்ள டோத்தனைச் சேர்ந்தவர் அமண்டா ஓக்ஸ், என்ற 36 வயது பெண்.

இவர் கடந்த ஜூன் மாதம் பேஸ்புக் நேரலையில், தன்னுடைய மகளுக்கு ஊக்கமருந்தினை ஊசியின் மூலம் உட்செலுத்தி கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு துர்நாற்றம் வீசும் என்பதற்காக குழந்தையின் சடலத்தை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்திருந்துள்ளார்.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் அமண்டா, வெளியில் வருவதற்காக அவருடைய பிணைத்தொகையை $400,000 டொலர்களில் இருந்து குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் இதற்கு குழந்தைகளை நல மையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமண்டாவை வெளியில் விடுவதால் மற்ற குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் அமண்டாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ஒரு தாயாக எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நான் ஒரு போதும் குழந்தைகளிடம் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என நினைக்க மாட்டேன். அமண்டா மீண்டும் திரும்ப இருப்பது எங்கள் அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers