பணிப்பெண்கள் என் மகள் பெயரை கேலி செய்தார்கள், தாயின் புகார்: அது என்ன பெயர் தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

விமானப் பணிப்பெண்கள் தனது மகளின் பெயரைக் கேலி செய்து சிரித்ததாக ஒரு அமெரிக்க தாய் புகாரளித்துள்ள நிலையில், அது என்ன பெயர் என்று தெரியவரும்போது, நீங்களும் தயவு செய்து சிரிக்காதீர்கள்.

கலிபோர்னியாவிலிருந்து டெக்சாசுக்கு செல்ல, தனது மகளுடன் விமானம் ஏறினார் Traci Redford.

விமான பணிப்பெண் ஒருவர் அவரது மகளின் போர்டிங் பாஸைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே அதை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் அதை சமூக ஊடகம் ஒன்றிலும் வெளியிட்டார். எனது மகளை கைகாட்டி அந்த பணிப்பெண் சிரிக்க ஆரம்பித்து விட்டார், அதைக் கண்ட என் மகள், அவர் ஏன் சிரிக்கிறார் என சோகத்துடன் கேட்டாள்.

அம்மா, அவர் ஏன் என் பெயரைப் பார்த்து சிரிக்கிறார்? என்று என் மகள் கேட்க, நான் அவளிடம், எல்லோருமே எப்போதுமே நம்மிடம் அன்பாக இருப்பதில்லை, அது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினேன் என்கிறார் Traci Redford. பிரச்சினை பெரிதானதும் விமான நிறுவனம் Traci Redfordஇடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

அப்படி இவ்வளவு பிரச்சினைகளை ஏற்படுத்திய அந்த சிறுமியின் பெயர் என்ன தெரியுமா? அந்த விமானப் பணிப்பெண்ணை சிரிக்க வைத்த அந்த பெயர், Abcde, அதை அப் சிடீ என்று படிக்க வேண்டுமாம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers