60 ஆண்டுகளில் 2,000 விமானங்களை விழுங்கிய பகுதி: பகீர் கிளப்பும் மர்மம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

மேற்கு அமெரிக்காவில் உள்ள நெவாடா முக்கோணம் என அறியப்படும் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளில் சுமார் 2,000 விமானங்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விமானங்களின் கல்லறை என அறியப்படும் குறித்த பகுதிக்கு சாகச பயணம் மேற்கொண்ட விமானிகள் பலரும் இதுவரை திரும்பவில்லை.

நெவாடா முக்கோணம் என அறியப்படும் பகுதியானது ஃப்ரெஸ்னோ, கலிபோர்னியா முதல் ரெனோ, நெவாடா தொடங்கி மேற்கு அரிசோனா வரை பரந்து கிடப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த முக்கோணமானது 25,000 சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது என்றும், இங்கிலாந்தின் பாதியளவு கொண்டது எனவும் கூறப்படுகிறது.

குறித்த முக்கோணத்தில் மாயமான விமானம் தொடர்பில் மிகவும் பிரபலமான வழக்கு நடந்தது 11 ஆண்டுகளுக்கு முன்னர்.

பெரும் செல்வந்தரும் சாகச பிரியருமான Steve Fossett என்பவர் தமது வாழ்நாளில் 100 விமான சாகசங்கள் புரிந்து சாதனை படைத்தவர்.

ஆனால் 2007 ஆம் ஆண்டு இவரது ஒற்றை இயந்திரம் கொண்ட விமானமானது கலிபோர்னியா, நெவாடா எல்லையில் மாயமானது.

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினர் துப்புத்துலங்காமல் குழம்பிப் போயுள்ளனர்.

மாயமான Steve Fossett தொடர்பில் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. Steve Fossett-ன் விமானம் புறப்பட்டு 6 மணி நேரத்திற்கு பின்னர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட சிறப்பு குழுவினர் சுமார் 20,000 சதுர மைல்கள் தேடியுள்ளனர்.

ஆனால் சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின்னர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட ஒருவர் மூன்று அடையாள அட்டைகளை கண்டெடுத்துள்ளார். அவை மாயமான பில்லியனர் Steve Fossett என்பவரது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் திகதி Steve Fossett-ன் விமான புறப்பட்டதன் 65 மைல்கள் தொலைவில் இருந்து விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.

ஆனால் மிகவும் அனுபவம் வாய்ந்த Steve Fossett போன்ற ஒரு விமானி எப்படி விபத்துக்குள்ளானார் என இதுவரை நிபுணர்களால் விடை தேட முடியவில்லை.

இருப்பினும் காலநிலை காரணமாக இருக்கலாம் எனவும், காந்த அலை தாக்குதல் இருக்கலாம் எனவும் நிபுணர்கள் உறுதிப்படுத்தாத தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers