அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வெடித்து சிதறி கரிக்கட்டையான நிலையில் விமானி தீயில் கருகி உயிரிழந்தார்.
இண்டியானா மாகாணத்தின் மரியோன் நகரை சேர்ந்தவர் ஜெப்ரி பேரேட் (60). இவர் சிறிய ரக விமானம் ஒன்றை தனியாக இறங்கியுள்ளார்.
விமானமானது திடீரென தரையில் மோதிய நிலையில் வெடித்து சிதறியது.
இதில் ஜெப்ரி தீயில் கருகி உயிரிழந்தார். விமானமும் கரிக்கட்டையானது.
இது குறித்து ஜெப்ரியின் பேரன் கேஜ் கூறுகையில், விமானத்தின் இன்ஜீனில் கோளாறு ஏற்பட்டது. இதை சரி செய்த என் தாத்தா விமானத்தை இயக்கி பரிசோதித்தார்.
அப்போது தான் இந்த கோர சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.
விமானமானது செங்குத்தாக பறந்த போது இவ்விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையில், ஒரு விமானம் தரையிறகும் போது ஜெப்ரியின் விமானம் கிளம்பியதாகவும் அதை ஜெப்ரி கவனிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.