ரோமியோ - ஜூலியட் போல கட்டியணைத்தபடியே இறந்து கிடந்த இளம் காதல் ஜோடி! நெஞ்சை உருக்கும் காதல் சம்பவம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் கட்டியணைத்தவாறே இளம்காதல் ஜோடி படுக்கையில் இறந்து கிடந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நியூபோர்ட் பீச் பகுதியில் உள்ள வீட்டில் இளம்காதல் ஜோடியினர் இறந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இருவரும் அதிகமான அளவு ஊக்க மருந்து உட்கொண்டிருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து இறந்து கிடந்த மிச்செல்லா ஆவிலாவின் (23) பெற்றோர் பாலோ மற்றும் அட்ரியானா கூறுகையில், எங்களுடைய மகளும், அவளுடைய காதலனும் அதிகமாக மது அருந்த மாட்டார்கள். ஊக்க மருந்து சாப்பிட்டதால் தான் இறந்திருக்கின்றனர்.

மிச்செல்லா பள்ளி பருவத்தில் செய்த சாதனைகளுக்காக அவளுக்கு ஜார்ச் புஸ் ஒருமுறை கடிதம் அனுப்பினார். நல்ல கெட்டிக்கார பெண். அவளுடைய அக்காவை போல ஒரு பத்திரிகையாளராக வேண்டும் என ஆசைப்பட்டாள். நிறைய புத்தகங்கள் படிப்பததோடு, நிறைய எழுதும் பழக்கமும் அவளுக்கு உண்டு.

கடந்த சில ஆண்டுகளாக மிச்செல்லா, அவளுடைய காதலன் கிறிஸ்டியன் கென்ட் (20) உடன் சேர்ந்து பாலி, இந்தோனேசியா, கோஸ்டா ரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பயணம் செய்து சுற்றிப்பார்த்தார்.

சம்பவம் நடைபெற்றதற்கு முன்தினம் இருவரும் ஒரு பார்ட்டிக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு வீடு திரும்பினார். மறுநாள் காலையில் அலுவலக வேலைக்கு செல்ல வேண்டும் என நான் எழுப்ப சென்றேன். அப்போது ரோமியோ - ஜூலியட் போல இருவரும் கட்டியணைத்தபடி இறந்துகிடந்தனர் என தெரிவித்துள்ளார்.

ஆகஸ்டு மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்டியனை பிரிந்து கல்லூரி செல்லவிருக்கும் தருணம் பற்றி பதிவிட்டுள்ள மிச்செல்லா, நான் என்னுடைய வாழ்க்கை துணை மற்றும் நண்பனுக்கு குட் பை சொல்கிறேன்.

நான் அந்த தருணத்தை நினைத்து பார்க்க விரும்புகிறேன். நான் வேலை செய்த இடத்திற்கு வந்து நீ இதே கண்களால் என்னை பார்த்து சிரித்தாய். பின்னர் அருகில் வந்து என்னுடைய போன் நம்பரை கேட்டை. சரியான நேரத்தில் என்னை கண்டுபிடித்திருக்கிறாய். நரகத்தில் இருந்த என்னுடைய வாழ்க்கையை மாற்றி சவாரி செய்ய வைத்தாய் என பதிவிட்டிருந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...