கஜா புயல் நிவாரணத்திற்காக அமெரிக்காவில் மொய் விருந்து நடத்திய தமிழர்கள்

Report Print Kabilan in அமெரிக்கா

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிய, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வாழும் தமிழர்கள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் கஜா புயல் நடத்திய கோரதாண்டவத்தால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகள், வீடுகள், விவசாய நிலங்களை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் வசிக்கும் தமிழர்களும், கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

அதன்படி, வாஷிங்டன் நகரில் இருக்கும் ஏம்ஸ் இந்தியா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மொய் விருந்து ஏற்பாடு செய்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் இதில் கலந்துகொண்டு உணவருந்தி நன்கொடை வழங்கினர்.

இதன்மூலம் கிடைத்த நிதி அனைத்தும், வேதாரண்யம் பகுதியில் இருக்கும் 7 கிராமங்களில் 650 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாக விருந்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், 8 கிராமங்களுக்கு உதவி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...