47,000 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாக காரணமாக இருந்தவர் இவர்தான்: ஒரு அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

மேற்கத்திய நாடுகளில், கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக gender reveal party என்னும் ஒரு பார்ட்டி நடத்தப்படுவதுண்டு.

அவ்வாறு நடத்தப்பட்ட ஒரு பார்ட்டி, Arizonaவில் காட்டுத்தீயை உருவாக்கி அதனால் 47,000 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாவதற்கு காரணமாக அமைந்துள்ள விவரம், தற்போது வீடியோ ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், Arizonaவில் ஏற்பட்ட ஒரு காட்டுத்தீயால் 47,000 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமானதோடு, 8.2 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டது.

சுமார் 800 தீயணைப்பு வீரர்கள், ஒரு வாரம் போராடிதான் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீயை உருவாக்கியதாக அல்லது தொடங்கியதாக Dennis Dickey (37) என்னும் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு வீரரான Dennis தனது மனைவியின் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்காக gender reveal party நடத்தினார்.

அதில் ஒரு பெட்டியில் வண்ணப்பொடிகளை நிரப்பி, அதை தனது துப்பாக்கியில் உள்ள வெடி பொருளால் சுடுவது அவரது திட்டம்.

ஆனால் அவர் தனது துப்பாக்கியில் நிரப்பியிருந்தது, Tennerite என்னும் மோசமாக வெடிக்கும் பொருள்.

Dennis இலக்கை குறி வைத்து சுட, அது வெடித்து நீல நிற பொடிகளை வெளிப்படுத்தியது, அதாவது குழந்தை ஆண் என்பதை உறவினர்களும் நண்பர்களும் அறிந்து கொண்டனர்.

ஆனால் வெடித்த அந்த வெடி பொருள் வேகமாக பரவி காடுத்தீயை உருவாக்கியது. உடனடியாக Dennis தீயணைப்புத்துறை மற்றும் பொலிசாருக்கு தகவலளித்தாலும், தீ வேகமாக பரவிவிட்டது.

கடைசியில் ஒரு வார போராட்டத்திற்கு பின்னரே, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனால் ஏற்பட்ட இழப்பு 8.2 மில்லியன் டொலர்கள்.

இதனால் அனுமதியின்றி தீயை ஏற்படுத்தியதற்காக Dennisக்கு 220,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளையாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாததால் இந்த தண்டனையோடு Dennis தப்பினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers