ஹார்வர்டு தலைவராக தமிழ் மாணவி தேர்வு: குவியும் பாராட்டுக்கள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுருதி பழனியப்பன் என்ற தமிழ்ப்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் மன்றத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 வயதான சுருதி பழனியப்பன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக அவருடைய தோழி ஜூலியா ஹியூசா (20) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருவரும் 41.5 விழுக்காடு ஓட்டுக்கள் பெற்றதாகவும், எதிர்தரப்பினர் 26.6 விழுக்காடு ஓட்டுக்கள் மட்டுமே பெற்றதாக அறிக்கைகள் கூறுகின்றன.

சுருதியின் பெற்றோர் கடந்த 1992-ம் ஆண்டு சென்னையிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.

வெற்றிக்கு பின் ஹார்வர்டு கிரிம்சன் பத்திரிகையில் பேசிய சுருதி, மாணவர்களின் கல்வியில் அக்கறைக் காட்டுவது, மனதளவில் பிரச்னைகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார் செய்வது பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல்ரீதியான தொல்லைகளைத் தடுப்பது, மாணவர்களின் சமூகப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றும் பாலியல் சமத்துவத்தை எட்டுவது போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றப் போகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்