வயதான காலத்தில் விவாகரத்து: கண்கலங்கி நின்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in அமெரிக்கா
335Shares

அமெரிக்காவில் வயதான காலத்தில் விவாகரத்து கிடைத்ததை நினைத்து கவலையடைந்த பெண்ணை, பல ஆண்களும் வியந்து பார்த்து அழகை பாராட்டி வரும் சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுதியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகனத்தை சேர்ந்த விக்கி என்ற பெண் 18 வயதிலே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்தே பழக்கபட்ட விக்கி, 44 ஆண்டுகளுக்கு பின் தனித்து வாழ போவதை நினைத்து அழுதுள்ளார்.

தான் ஒரு புதிய வாழ்க்கையை வாழ விரும்புதாகவும், அதற்கேற்றவாறு தன்னை முற்றிலும் மாற்ற உதவுமாறு தனியார் நிறுவனத்தை நாடியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றினை யூடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அவருடைய உருவம் மற்றும் முழுத்தோற்றத்தை மாற்றும் முயற்சியில் ஒரு குழு செயல்பட ஆரம்பித்தது. அன்றிலிருந்து நம்ப முடியாத வகையில் அவருடைய தோற்றம் இளமையான ஒரு பெண்ணை போல காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது அவருடைய அழகை பார்த்து ஆண்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் ஒருவர், "இந்த பெண் அழகான முகம் மற்றும் கருணை நிறைந்தவளை போல இருக்கிறாள். ஆனால் அவளுடைய வலியை முகம் காட்டிக்கொடுக்கிறது".

மற்றொருவர், "OMG நான் நாக் அவுட் ஆகிட்டேன. மிக மோசமான முன்னாள் கணவரே, நீங்கள் அழகான மனைவியை இழந்துள்ளீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் விக்கி பார்க்க ஒரு நடிகைபோல இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்