25 வருடங்களாக லொட்டரி வாங்கிய நபர்: இறுதியில் அள்ளியது எத்தனை மில்லியன் தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியிருக்கும் நபர் ஒருவர் லொட்டரியில் 343 மில்லியன் டொலர் பரிசை அள்ளியது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டனில் குடியிருப்பவர் 67 வயதான ராபர்ட் பெய்லி. திருமணம் செய்துகொள்ளாத இவர் கடந்த 25 ஆண்டுகளாக லொட்டரி வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஆனால் தற்போது நியூயார்க் வரலாற்றிலேயே மிக அதிக பரிசுத் தொகையை அள்ளியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி 343.8 மில்லியன் டொலர் பரிசை ஒரே ஒரு லொட்டரி மூலம் ராபர்ட் பெய்லி அள்ளியுள்ளார்.

ராபர்ட் பெய்லி கடந்த 25 ஆண்டுகளாக 8, 12, 13, 19, 27 என்ற வரிசை கொண்ட லொட்டரிகளை மட்டுமே வாங்கி வந்துள்ளார்.

Harlem பகுதியில் உள்ள 3 கடைகளில் இருந்தும் வாரந்தோறும் லொட்டரி வாங்கும் இவர் கடந்த 28 ஆம் திகதி வாங்கிய லொட்டரி இவரது வாழ்க்கையையே மாற்றியுள்ளது.

மழை பெய்துகொண்டிருந்த அன்று நனையாமல் இருக்க ஒரு தேனீர் விடுதியில் நுழைந்துள்ளார். அங்கிருந்தே மில்லியன்கள் பரிசை அள்ளிய அந்த அதிர்ஷ்ட லொட்டரியை பெய்லி வாங்கியுள்ளார்.

அன்று மாலை பரிசு விழுந்தவர்கள் பட்டியலை பரிசோதித்தவருக்கு நம்பவே முடியவில்லையாம்.

தற்போது கிடைத்த பணத்தை உரிய முறையில் முதலீடு செய்ய வேண்டும் என கூறும் பெய்லி, தாயாருக்கு ஒரு குடியிருப்பு ஒன்றை வாங்கித் தரவேண்டும் எனவும், பிடித்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டமும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தமது இறுதி நாட்கள் வரை லொட்டரி வாங்குவதை நிறுத்துவதில்லை எனவும் பெய்லி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்