இரட்டை தலையுடன் இறந்து கிடந்த மான்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா
477Shares

அமெரிக்காவை சேர்ந்த மீன் மற்றும் வனவிலங்குகள் துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர், இரண்டு மான்களின் தலைகள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட நிலையில் கிடந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

வடக்கு கென்டகிலுள்ள பலாார்ட் கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமையன்று மீன் மற்றும் வனவிலங்குகள் துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் விசித்திரமான நிலையில் இருந்த மான் ஒன்றினை பார்த்துள்ளனர்.

அதனை புகைப்படமாக எடுத்து தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருவதுடன் இதை வைரலாக்கியும் வருகின்றனர்.

புகைப்படம் பதியப்படத்திலிருந்து 2000 பேர் பகிர்ந்துள்ளனர்.

இதில் இரண்டு மான்களின் தலைகள் பின்னப்பட்டிருந்த போது ஒரு மான் மட்டும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. தப்பி செல்ல முயன்ற மற்றொரு மான் இறந்த மானின் தலையுடன் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படங்களை தற்போது நெட்டிசன்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்