யார் யாருக்கு குடியுரிமை? டிரம்பின் அதிரடி முடிவு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமை ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டிலிருந்து குடிபெயர்ந்து, மற்றொரு நாட்டில் வாழ்ந்து வருபவர்களுக்கு குடியுரிமை கிடைப்பது கடினம். ஆனால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கொடுக்க சில நாடுகள் முன்வரும்.

அமெரிக்காவும் இதையே நடைமுறையைப் பின்பற்றி வந்தது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவர் பேசுகையில், ``மற்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் வசிப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, எங்கள் நாட்டின் சார்பில் குடியுரிமை வழங்கப்படும்.

அபத்தமான இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த முடிவு குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர்கள் பரீசிலனை செய்து வருகின்றனர் என்றார்.

ஆனால், இந்த உத்தரவு எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

கடந்த 150 ஆண்டுகளாக அமுலில் இருக்கும் முக்கிய சட்டத்தை ஜனாதிபதி டிரம்ப் திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசியலைப்பு சட்ட 14-வது திருத்தத்தின்படி, அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான முழு உரிமை உள்ளது என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers