பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி அமெரிக்கவாழ் தமிழர்கள் செய்த செயல்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்து அமெரிக்கவாழ் தமிழர்கள் தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டு கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கு ஒன்றினை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாமே என கூறியிருந்தது. அதன்பேரில் தமிழக அரசும் ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

ஆனால் எழுவர் விடுதலை தொடர்பாக இன்று வரை ஆளுநர் தரப்பு எந்தமுடிவும் எடுக்காமல் உள்ளனர். இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள கனக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers