தவறான ஒரு போன் கால், உயிரைக் காத்த உணவக மேலாளர்: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனக்கு தவறாக வந்த ஒரு போன் காலை அலட்சியம் செய்யாமல் உணவக மேலாளர் ஒருவர் செய்த நெகிழ்ச்சி செயல் ஒரு நோயாளியை ஆபத்திலிருந்து காப்பாற்றிய சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

தனது சகோதரரின் முதுகெலும்பு சிகிச்சைக்காக Nebraska சென்று விட்டு Tampa திரும்பிய Lisa Nagengast, விமானத்தில் வந்திறங்கியதும் ஏதாவது செய்திகள் வந்துள்ளனவா என தனது மொபைலை பரிசோதித்தபோது ஒரு திகிலூட்டும் வாய்ஸ் மெயில் வந்திருப்பதைக் கண்டார்.

அதில் இப்போதுதான் சந்தித்து வந்திருந்த அவரது சகோதரரான Greg Holeman, வலியால் துடிப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ஏதோ பிரச்சினை உள்ளது போல் தோன்றுவதாகவும், இடது காலில் உணர்வே இல்லை என்றும் கண்ணீருடன் கூறியிருந்தார்.

தான் தனிமையாக இருப்பதாகவும், உதவ யாருமில்லை என்றும், டாக்சிக்கும் பணமில்லை என்றும் ஆம்புலன்ஸ் பிடித்தால் அதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் கொடுக்குமா என தெரியவில்லை என வலியுடன் அவர் தெரிவித்திருந்த செய்தி Lisaவுக்கு பயத்தை ஏற்படுத்தியது.

என்ன செய்வது என திகைத்து நிற்கும்போது, தன்கு தெரிந்த ஒரு சமூக சேவகர் Nebraska வில் இருப்பதாகவும் அவரை உதவிக்கு அழைக்கலாம் என்றும் Holeman கூற, அவரது தொலைபேசி எண்ணைப் பெற்று கொண்ட Lisa, அந்த சமூக சேவகருக்கு போன் செய்தார்.

மறுமுனையில் பேசிய நபர், உடனடியாக தான் ஆளனுப்பி Lisaவின் சகோதரருக்கு உதவுவதாக உறுதியளித்து, மீண்டும் சிறிது நேரத்திற்குப்பின் அழைப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

மீண்டும் சிறிது நேரத்திற்குப்பின் Lisaவை அழைத்த ஒருவர், அவரது சகோதரரின் பெயர் மற்றும் முகவரியைக் கொடுக்குமாறு கேட்டார். உங்களது நோயாளிகள் கோப்பில் அவரது பெயர் மற்றும் முகவரி இல்லையா என Lisa கேட்க, மறுமுனையில் பேசிய நபர், மேடம், நீங்கள் உணவகம் ஒன்றிற்கு போன் செய்துள்ளீர்கள், அங்கிருந்துதான் நான் பேசுகிறேன் என்று கூற தனது தவறை உணர்ந்த Lisa மௌனமானார்.

சகோதரரை என்ன செய்வது என மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓட, என்னை மன்னிக்க வேண்டும், தவறான எண்ணை அழைத்து விட்டேன், என வருத்தத்துடன் Lisa தெரிவிக்க, மறு முனையிலிருந்த நபர், தன்னுடைய பெயர் Zach Hillmer என்று கூறி, வருத்தப்பட வேண்டாம், நான் உங்கள் சகோதரரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன், உங்கள் சகோதரரின் பெயர், முகவரியை மட்டும் கூறுங்கள் என்று கூறியிருக்கிறார்.

நெகிழ்ந்துபோன Lisa விவரங்களைத் தெரிவிக்க, தகவல் பரிமாற்றங்களுக்குப் பிறகு, Zach, Holemanஐ மருத்துவமனை கொண்டு சேர்க்க, சிகிச்சையில் சில மாற்றங்களுக்குப்பின் பத்திரமாக வீடு திரும்பியுள்ளார் அவர்.

Lisa தவறாக போன் செய்து அழைத்த உணவகத்தின் மேலாளராக Jason Voss செய்த மனிதாபிமானமிக்க செயல் குறித்து தகவல்கள் வெளியாக, வரிசையாக பல ஊடகங்கள் அவரை நேர்காணல் செய்து கொண்டிருக்கின்றன.

அந்த நேரத்தில் தான் செய்ததுதான் சரி என்று கூறும் Jason, ஒருவருக்கு உதவி தேவைப்பட்டது, நான் உதவினேன் அவ்வளவுதான், நானே நேரில் சென்றுகூட உதவியிருக்க முடியும், ஆனால் ஒரு உணவக மேலாளராக எனது வேலையை பாதியில் விட்டுச் செல்ல இயலாததால் Zachஐ அனுப்பினேன் என்கிறார் அவர் சாதாரணமாக

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers