நள்ளிரவில் நடனமாடிய மக்கள் பட்டாளம்! திடீரென சரிந்த தளம்... அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in அமெரிக்கா

தென் கரோலினாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விருந்து நிகழ்ச்சியின் போது, திடீரென தளம் சரிந்து விழுந்ததில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

தென் கரோலினாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான இளைஞர் பட்டாளம் சேர்ந்து விருந்து நிகழ்ச்சி ஒன்றினை கொண்டாடியுள்ளனர்.

நிகழ்ச்சியின்போது அனைவரும் சேர்ந்து நடனமாடினர். அப்போது திடீரென வீட்டின் தளம் சரிந்து விழுந்தது.

வீடியோவை காண...

இதில் நடனமாடிக்கொண்டிருந்த பலரும் கத்திகொண்டே தரையில் விழுந்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்த இளைஞர் இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தது விசாரித்து வருகின்றோம். இதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் யாருக்கும் ஆபத்தான அளவில் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், நான்வெளியில் செல்லலாம் என கதவை திறந்தேன். அப்போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. நான் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக்கொண்டேன். அனைவரும் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டனர். ஒரு சிலர் சத்தமாக அழ ஆரம்பித்துவிட்டனர். அதன் பிறகு அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் ஒவ்வொருவராக மீட்டோம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...