முடிவுக்கு வந்த 9 வயது சிறுமியின் மரணப் போராட்டம்! நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் மூளைச் சாவு அடைந்த சிறுமி இயந்திரங்களின் உதவியுடன் உயிர் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவர் இயற்கையாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி பேடன் சம்மன்ஸ். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், இயந்திரங்களின் உதவியுடன் பேடன் சம்மன்ஸ் உயிர் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு கொடுக்கப்பட்டு வந்த இயந்திரங்களின் உதவியை நிறுத்த மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இதனை விரும்பாத சிறுமியின் பெற்றோர், இயந்திரங்களை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், அவர் மூளைச் சாவு அடைந்திருந்தாலும் அவரை உயிருடன் தான் வைத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்று ஆணை பெற்று வந்தனர்.

இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தின் சட்டத்தின்படி மூளை செயல்பாடு நின்றுவிட்டால், அந்நபர் மரணமடைந்தவராகவே கருதப்படுவார் என்பதால், சிறுமி பேடன் சம்மன்ஸ் இயற்கையாக மரணமடைந்துவிட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...