1.6 பில்லியன் டொலர் பரிசுத் தொகை: உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லொட்டரி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லொட்டரியில் கடந்த சில வாரங்களாக வெற்றியாளரே இல்லாத நிலையில், இந்த வாரம் வெற்றிபெறுபவரின் பரிசுத் தொகை 1 .6 பில்லியின் டொலராக அதிகரித்து சாதனைபடைத்துள்ளது.

அமெரிக்காவில் பிரபலமான லொட்டரிகளில் ஒன்று மெகா மில்லியன்ஸ். அந்த நாட்டின் 44 மாகாணங்கள் இந்த விளையாட்டில் பங்கு பெறுகின்றன.

ஒரு டொலரிலிருந்து, மூன்று டொலர் வரை டிக்கெட் விலை விற்கிறது. எவ்வளவு டொலர்களுக்கு லொட்டரிகள் விற்கப்படுகின்றனவோ, அதில் பெரும் பங்கு வெற்றியாளருக்கு வழங்கப்படும்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வெற்றியாளர்களைத் தெரிவு செய்கின்றனர்.

ஜாக்பாட் எண் யாரிடமும் இல்லை என்றால், அந்தப் பரிசுத் தொகை சேர்ந்து, அடுத்த வாரம் ஜாக்பாட் பரிசாக அறிவிக்கப்படும்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வெற்றியாளர்களே இல்லாத நிலையில், இந்த வாரம் வெற்றிபெறுபவரின் பரிசுத் தொகை 1 .6 பில்லியின் டொலராக அதிகரித்துள்ளது.

இம்முறை வெற்றிபெறுபவர், உலகின் பிரபலங்கள் பலரை விட அதிக பணக்காரர் ஆகிவிடுவார். இதுவரை இந்த விளையாட்டில், வரலாற்றிலேயே இந்த அளவுக்கு பரிசுத் தொகை அதிகரித்ததில்லை என கூறப்படுகிறது.

இதனால், அமெரிக்கா முழுவதும் இந்த வெற்றியாளருக்காகக் காத்திருக்கிறது. இந்நிலையில், பெரும் பிரபலங்கள்கூட அதிக விலை கொடுத்து இந்த வார டிக்கெட்டுகளை வாங்கிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல குத்துச்சண்டை வீரர் Floyd Mayweather சமீபத்தில் இரண்டாயிரம் டொலர் செலவழித்து இதற்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருந்துவரும் இந்த மெகா மில்லியன்ஸ் லோட்டரியானது, அறிமுகப்படுத்திய நாளில் இருந்து பல்வேறு மாறுதல்களை கடந்து பிரபலமடைந்து வருகிறது.

மட்டுமின்றி, அதிக வெற்றியாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, சட்டத்திட்டங்களில் பெரும் மாறுதலை கொண்டுவந்துள்ளதும் இந்த லோட்டரியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அமெரிக்காவே எதிர்பார்க்கும் இந்த லாட்டரி வெற்றியாளர் தேர்ந்தெடுப்பு, வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்