இந்தியருக்கு அமெரிக்காவின் உயரிய விருதளித்து கவுரவித்த வெள்ளை மாளிகை

Report Print Arbin Arbin in அமெரிக்கா

ஆள் கடத்தலுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டதற்கு அந்த துறையின் மிக உயரிய விருதான ஜனாதிபதி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளிப்பெண்ணான மினல் பட்டேல் டேவிஸ்.

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகர மேயர் சில்வெஸ்டர் டர்னருக்கு, ஆள் கடத்தல் தடுப்பு ஆலோசகராக இருப்பவர், மினல் பட்டேல் டேவிஸ்.

இவர் ஆள் கடத்தலுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டதற்கு அந்த துறையின் மிக உயரிய விருதான ஜனாதிபதி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை அவருக்கு அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வழங்கி கவுரவித்தார்.

இது தொடர்பாக பேசிய மினல் பட்டேல், எனது பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தவர்கள்.

எங்கள் குடும்பத்தில் அமெரிக்காவில் முதலில் பிறந்தது நான்தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேயர் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தேன்.

இப்போது வெள்ளை மாளிகை வரை வந்து விட்டேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இவர் உள்ளூரிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு குழுக்களில் இடம்பெற்று ஹூஸ்டன் நகரம் சார்பில் ஆள் கடத்தலுக்கு எதிராக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்