குழந்தையை தரதரவென இழுத்து வரும் பெண்: வீடியோ விளக்கும் அதிர்ச்சி செய்தி

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் தனது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் குரல் கேட்டு வெளியே வந்த ஒரு பெண் அங்கு ஒரு குழந்தை திருதிருவென விழித்துக் கொண்டு நிற்பதைக் கண்டார் தனது சர்வைலன்ஸ் கெமராவை சோதித்த அவர் அதில் ஒரு பெண் அந்த குழந்தையை அவரது வீட்டின் முன் விட்டு விட்டு ஓடுவதைக் கண்டார்.

உடனடியாக அவர் பொலிசாருக்கு தகவல் தர, விரைந்து வந்த பொலிசார் அந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.

மறுநாள் அந்தக் குழந்தை அந்த வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் Willie Simmonsஇன் குழந்தை என்பது தெரியவந்தது.

பின்னர் விசாரணையில் Royal Prince Simmons என்னும் அந்தக் குழந்தையின் தாய், தன் குழந்தையை அதன் வீட்டில் விட்டு விடுமாறு தனது தோழியிடம் கேட்டுக் கொள்ள, அந்தப் பெண் அந்தக் குழந்தையை அதன் அப்பா இருக்கும் வீடு என்று நினைத்து பக்கத்து வீட்டு வாசலில் விட்டு விட்டு ஓடி விட்டது தெரியவந்தது.

அந்த வீடியோ காட்சியில் அந்தப் பெண் அந்தக் குழந்தையை ஒற்றைக் கையைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து வீட்டு வாசலில் விட்டு விட்டு ஓடும் காட்சி பதிவாகியிருந்தது.

Royalஇன் தாயிடம் இது குறித்து விசாரித்தபோது தவறுதலாக அவ்வாறு நடந்து விட்டதாக தெரிவித்தார்.

குழந்தையின் தந்தையான Willieயோ தனது குழந்தை எக்காரணம் கொண்டும் இவ்வளவு அஜாக்கிரதையான ஒரு தாயிடம் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளதோடு, தனது குழந்தையை தரதரவென இழுத்து வந்து விட்டுச் சென்ற அந்த பெண்ணுக்கு தக்க தண்டனை தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்