குழந்தையை தண்ணீருக்குள் மூழ்கடித்த வீடியோவை கணவனுக்கு அனுப்பி மிரட்டிய கொடூர தாய்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனக்கு பணம் தராத கணவரை மிரட்டுவதற்காக ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து அதை வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பிய ஒரு கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்ஜியாவைச் சேர்ந்த Laquanda Lenea Mosley (27)க்கும் அவளது கணவரான Kevin Banksக்கும் குழந்தைகளை யார் வைத்துக் கொள்வது என்னும் விடயத்தில் பிரச்சினை இருந்தது.

இந்நிலையில் ஒரு நாள் அவள் சமூக ஊடகம் வழியாக தனது கணவரிடம் பணம் கேட்டுக் கொண்டே இருக்க, அவர் பதில் எதுவும் கொடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமுற்ற Mosley, இது தானே உனக்கு வேண்டும் என்று கத்திக்கொண்டே தனது ஐந்து மாதக் குழந்தையை தலைகீழாகத் தூக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீருக்குள் அதன் தலையை மீண்டும் மீண்டும் மூழ்கடித்துள்ளார்.

அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து அவள் தனது கணவனுக்கு அனுப்ப, வீடியோவைப் பார்த்து அதிர்ந்து போன Kevin அதை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிறகு பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து சென்ற பொலிசார் Mosleyயைக் கைது செய்ததோடு, அவரது மூன்று குழந்தைகளையும் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதித்தனர், என்றாலும் குழந்தைக்கு என்ன ஆயிற்று என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள Mosley மீது கொலை முயற்சி, குழந்தையைக் கொடுமைப்படுத்துதல் மற்றும் தீவிரவாத மிரட்டல் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்