தாத்தாவின் சாம்பலை நண்பர்களுக்கு விருந்தாக்கிய பேரன்

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவில் மாணவர் ஒருவர் தனது தாத்தாவின் சாம்பலில் இருந்து பிஸ்கட்டுகளை தயாரித்து சக நண்பர்களுக்கு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் நார்த் கலிபோர்னியாவில் டேவிஸ் நகரில் அமைந்துள்ள பள்ளியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 4ம் திகதி இது நடந்தாலும் தற்போதே பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி பால் டோரோசோவ் கூறுகையில், டாவின்ஸ் அகாடெமி பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் தாத்தா இம்மாத தொடக்கத்தில் இறந்து விட்டார்.

அவரது எரியூட்டப்பட்ட சாம்பலை கொண்டு, குறித்த மாணவர் வீட்டில் பிஸ்கட் தயாரித்துள்ளார்.

அதனை பள்ளிக்கு எடுத்து சக மாணவர்களுக்கு கொடுத்துள்ளார், ஒரு சிலர் அதில் மனித எலும்பின் வாசனை வருவதாக கூறியுள்ளனர்.

அதன்பின்னர் தன்னுடைய தாத்தாவின் சாம்பல் அது என கூறியுள்ளார், இதை கேட்டதும் மாணவர்கள் சிலர் வாந்தி எடுத்துள்ளனர்.

பள்ளியில் இருந்து இதுகுறித்து புகார் வந்ததும் விசாரித்தோம், எந்தவொரு மாணவரும் குறித்த மாணவன் மீது புகார் கொடுக்க தயாராக இல்லை, எனவே அதிகாரப்பூர்வ புகார் இல்லாத போது நடவடிக்கை எதுவும் எடுக்க இயலாது என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்