சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட மனைவியின் படங்களை வெளியிட்ட கணவர்: அவர் கூறும் காரணம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

குடித்து விட்டு தவறான பாதையில் வாகனம் ஓட்டிய ஒரு நபர் ஏற்படுத்திய விபத்தில் தனது மனைவியையும் அவரது வயிற்றிலிருந்த எட்டு மாதக் குழந்தையையும் இழந்த கணவர் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட தனது மனைவியின் படத்தையும் குழந்தையின் படத்தையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த பிறகாவது, தனது மற்றும் தனது மகனின் துக்கத்தை மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டும், கவனமாக வாகனம் ஓட்டட்டும் என்ற எண்ணத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தனது மனைவி இறந்து அவரை அடக்கம் செய்தபின் அது தொடர்பான புகைப்படங்களைக் பார்த்துக் கொண்டிருந்த Zach Kincaidஇன் கண்களில் ஒரு விடயம் பளிச்சென பட்டது.

அது தனது மகன் சவப் பெட்டி மூடப்படும் நேரத்தில் கடைசியாக தனது தாயின் முகத்தை சோகமே உருவாக பார்த்துக் கொண்டிருந்ததுதான்.

தன் மகனின் துக்கத்தையும் தனது துக்கத்தையும் இழப்பையும் ஈடு செய்யவே முடியாது என்பதை உணர்ந்த Zach Kincaid, அந்த புகைப்படங்களைப் பார்த்தாவது மக்கள் கவனமாக வாகனம் ஓட்டட்டும் என்ற எண்ணத்தில் அந்த படங்களை வெளியிட்டுள்ளார்.

தவறான பாதையில் வாகனம் ஓட்டி தன் மனைவி மற்றும் மகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த நபருக்கு வெறும் 10 ஆண்டுகள் மட்டும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், குடித்து விட்டு வாகனம் ஓட்டி, உயிரிழப்பை ஏற்படுத்துவோருக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் அமெரிக்கரான Zach Kincaid.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்