சுட்டுக் கொல்லப்பட்ட பெற்றோர்: மாயமான 13 வயது சிறுமியை தேடும் பொலிஸ்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் விஸ்கன்சின் மாகாணத்தில் பெற்றோர் கொல்லப்பட்டபின் காணாமல்போன 13 வயது சிறுமியை மாகாண அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஜேமி க்லாஸ் என்ற குறித்த சிறுமியின் பெற்றோர், ஜேம்ஸ் மற்றும் டெனிஸ் க்லாஸ், சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டுபிடித்துள்ள காவல் துறையினர்,

அச்சிறுமியும் தற்போது ஆபத்தை எதிர்கொண்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி அவரை மீட்கும்வரை நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள் அன்று காலை சுமார் ஒரு மணியளவில் அவசர உதவி எண்ணான 911-ன் தரவுகளின்படி, தாக்குதல் நிகழ்ந்தபோது அச்சிறுமி வீட்டில் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில் பொலிசார் குற்றவாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொலையில் அச்சிறுமி மீது சந்தேகம் இல்லையென அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்