டிரம்ப் மனைவி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்

Report Print Kavitha in அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்பின் மெலனியா டிரம்ப் நேற்று பிலடெல்பியா மாகாணம் புறப்பட்டு செல்வதற்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானத்தில் ஏறிய போது சிறிது நேரத்தில் விமானத்தின் கேபின் அறையில் இருந்து திடீரென புகை வெளியானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் மீண்டும் ஆன்ட்ரு ஏர்பேஸ் விமான தளத்தை வந்தடைந்தது. அதன்பின் விமானத்தில் இருந்து மெலனியா பத்திரமாக கீழே இறங்கினார்.

சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுவதாவது,

விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இயந்திர கோளாறால் புகை ஏற்பட்டது என தெரிவித்தார்.

அத்துடன் மெலினியா டிரம்ப் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்த டொனால்ட் டிரம்ப், அவருடன் தொலைபேசியில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்