டிரம்ப் அரசுக்கு எதிராக 2வது முறையாக வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனங்கள்

Report Print Kabilan in அமெரிக்கா
52Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த H-1B விசா கட்டுப்பாட்டிற்கு எதிராக, ஐ.டி நிறுவனத்தினர் 2வது முறையாக வழக்கு தொடர்ந்துள்ளன.

அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கான H-1B விசாவிற்கு இருந்த கட்டுப்பாடுகளை, டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியான பிறகு கடுமையாக்கினார்.

இந்த விசா மூலம் நிரந்தரமாக குடியேற முடியாது என்றாலும், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி பணிபுரியலாம். ஆனால், டிரம்பின் நடவடிக்கையால் H-1B விசாவின் காலம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் பணிபுரியும் மற்றும் நிறுவனங்களை நடத்தி வரும் வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் H-1B விசா கட்டுப்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியிருப்பு சேவை துறையின் மீது டெக்சாஸில் உள்ள நகர ஐ.டி. நிறுவனத்தினர், கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தெரிவித்துள்ள 43 பக்க புகாரில், H-1B விசா செல்லுபடியாகும் காலத்தை குறைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், விசா வழங்கும் அதிகாரத்தை தொழிலாளர் துறைக்கு வழங்க அமெரிக்க பாராளுமன்றம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்