கிம் ஜாங் உன்னுடன் காதலில் விழுந்து விட்டேன்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் காதலில் விழுந்துவிட்டதாக நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில், ‘முன்பெல்லாம் நான் வடகொரியா அரசிடம் கடுமையாக நடந்துகொண்டேன். அதற்கு பதிலுக்கு அவர்களும் அப்படியே நடந்து கொண்டார்கள்.

ஆனால், சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின் நாங்கள் அழகான கடிதப்பரிமாற்றங்களை செய்து வருகிறோம். அதன் விளைவாக இருவரும் காதலில் விழுந்துவிட்டோம். உண்மையில் கிம் ஜாங் அழகான கடிதங்களை எனக்கு அனுப்புகிறார்’ என தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த டிரம்ப்பின் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் சிரித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். முன்னதாக, டிரம்ப்-கிம் இருவரும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...