காதலனின் முகத்தில் பல முறை கத்தியால் குத்திய 27 வயது கொடூர காதலி! என்ன காரணம் தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் காதலன் நெருக்கமாக இருப்பதற்கு மறுத்ததால், காதலி அவரை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் Vero Beach பகுதியைச் சேர்ந்தவர் Katherine Tavarez. 27 வயதான இவரும் காதலனும் கடந்த வியாழக்கிழமை வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர்.

அப்போது Katherine Tavarez மது அருந்தியுள்ளார். இதையடுத்து காதலனுடன் நெருக்கமாக இருக்க ஆசைபட்டுள்ளார். ஆனால் காதலன் அதற்கு மறுத்ததால், ஆத்திரமடைந்த இவர் வீட்டில் இருக்கும் சமயலுக்கு காய்களை வெட்ட பயன்படுத்தப்படும், பெரிய கத்தியால் காதலனின் முகத்தில் பல முறை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால் இரத்த வெள்ளத்தில் துடித்த அவர் உடனடியாக அருகில் இருக்கும் Indian River Medical Centre மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரின் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்வத்தை தொடர்ந்து காதலியை கைது செய்த பொலிசார் அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இருப்பினும் அவர் $15,000 செலுத்தி பெயிலில் வந்துள்ளதாகவும், இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் மாதம் கடைசி திகதியில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...