தூக்கத்தில் உயிரிழந்த ஏழு மாத குழந்தை! இறுதிச்சடங்கில் தாய் செய்த செயல்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் தூக்கத்தில் உயிரிழந்த 7 மாத மகனின் இறுதிச் சடங்கு புகைப்படத்தை வெளியிட்டு, மகனை இழந்த வேதனையை கண்ணீருடன் தாய் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் Idaho பகுதியைச் சேர்ந்தவர் Kyrstyn Johnson(21). இவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு Mayson Micheal என்று பெயர் வைத்தார். இதற்கு முன் இவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் திகதி இவரின் 7 மாத மகன் Mayson Micheal தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அதன் பின் அவன் கண் விழிக்கவே இல்லை. அதன் பின் மருத்துவர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும், அவன் உயிரிழந்தான்.

7 மாத மகனை பறிகொடுத்து நிற்கும் Kyrstyn Johnson அந்த சம்பவத்தைப் பற்றி விளக்கியுள்ளார். அன்றைய தினம் என் அம்மாவிடமிருந்து போன் வந்தது. அந்த போன் கால் என்னை சுக்கு நூறாக்கிவிட்டது. அவர் தூங்கிய மகன் கண் விழிக்கவே இல்லை என்று கூறினார்.

இதனால் நான் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீட்டிற்கு விரைந்தேன். அங்கு மருத்துவர்கள் அவனை சோதித்துக் கொண்டிருந்தனர்.

அவனின் கண்ணை திறந்து பார்த்து, மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். அந்த தருணத்தை இதற்கு மேல் என்னால் விளக்க முடியவில்லை, தற்போது வரை அது மனதில் இருக்கிறது. இறக்கும் வரை இருக்கும்.

அவனுக்கு இதுவரை ஒரு பிரச்சனை கூட வந்தது கிடையாது என்று கண்னீர்விட்டுள்ளார்.

மேலும் அவனின் இறுதிச் சடங்கின் போது, ஒரு அழகான சின்ன சவப்பெட்டியில் அவனை வைத்தோம். அதன் பின் அவனுக்கு பிடித்த யானைக் கலர் நிற கோட் அணிவித்தோம், அதன் பின் கையில் பிடித்த சூரியகாந்தி பூக்களை வைத்தோம், மற்றொரு கையில் ஒரு அழகான யானை பொம்மை மற்றும் விரலில் மோதிரம் அணிவித்தோம் என்று கூறியுள்ளார்.

மகனை இழந்த Kyrstyn Johnson கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers