தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகையின் கார் இத்தனை கோடிக்கும் ஏலம் போகுமா! அது என்ன கார் தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

தற்கொலை செய்து கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகை மார்லின் மன்றோவின் கார் மூன்றரை கோடி ரூபாய் வரைக்கும் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1950-ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் தான் மர்லின் மன்றோ, இருப்பினும் இவரின் சொந்த வாழ்க்கை துயரமாகவே இருந்தது.

இரண்டு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தன. அதுமட்டுமின்றி பொருள் இழப்பு, மனச்சோர்வு, கவலைகள் போன்றவை அவரை ஆட்டிப் படைத்ததால், கடந்த 1962-ஆம் ஆண்டு 36 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மர்லின் மன்றோவின் பிளாக் போர்டு தண்டர் பேர்டு கார் ஏலத்துக்கு வருகிறது. இந்த காரை 1955 முதல் 1962-ஆம் ஆண்டு வரை அவர் பயன்படுத்தினார்.

எழுத்தாளர் ஆர்தர் மில்லரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இந்த காரை அவரது வியாபார பங்குதாரர் மில்டன் கிரீன் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகை பரிசாக வழங்கினார்.

ஆர்தர் மில்லரை அவர் திரு மணம் செய்தபோது இந்த காரில்தான் பயணித்தார். அதன்பிறகு இதை ஹாலிவுட் இயக்குனர் லீ ஸ்ட்ராச்பெர்க் மகனின் 18-வது பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கினார்.

இதையடுத்து தற்போது மன்றோ பயன்படுத்திய அந்த கார் ஏலத்துக்கு வரவுள்ளது. அடுத்த நவம்பர் மாதம் ஏலம் விடும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இது சுமார் 3 கோடிவரைக்கும் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers