200 பில்லியன் டொலர் புதிய வரி! டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 200 பில்லியன் டொலர் அளவிலான புதிய வரி விதித்துள்ளார்.

அமெரிக்காவும், சீனாவும் தொடர்ந்து வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகின்றன. அதாவது இரு நாடுகளும் மற்ற நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்து வந்தன.

அதன் பின்னர் இரு நாடுகளும் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தன. எனினும், சீனப் பொருட்களுக்கு அதிக அளவு வரி விதிக்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார்.

அத்துடன் அமெரிக்காவின் தயாரிப்பு ரகசியங்களை, காப்புரிமை விதிகளை மீறி சீனா திருடுவதாகவும், வர்த்தக நேர்மை இல்லாமல் நடந்து கொள்வதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இதனால் சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீனா உயர்த்தியது. இந்நிலையில், சீனப் பொருட்களுக்கு டிரம்ப் சுமார் 200 பில்லியன் டொலர் மதிப்பிலான கூடுதலான வரியை விதித்துள்ளார்.

இந்த வரி விதிப்பானது 24ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய வரி விதிப்பால் சீனாவின் இணையத் தொழில்நுட்பத் தயாரிப்புகள், கடல் உணவுப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், மரச்சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றின் மீதான வரி மிகவும் உயரும்.

AFP

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்