மாணவர்களிடம் அத்துமீறும் ஆசிரியைகள்! சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியை: வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

சமீபகாலமாக மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியைகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்துவருவது பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

Texas பள்ளி ஒன்றில் நடன ஆசிரியையாக பணிபுரியும் Whitney Laidlaw (32) தன்னிடம் நடனம் பயிலும் ஒரு மாணவியிடம் அத்து மீறியுள்ளதை அந்த மாணவியின் தந்தை அவளது செல்போனில் வந்திருந்த குறுஞ்செய்திகளை வைத்து கண்டுபிடித்தார்.

Whitney அந்த மாணவிக்கு, உன் மீது எனக்கு ஆசை இருக்கிறது என்று ஒரு செய்தி அனுப்பியதாக அவள் தெரிவித்தாள்.

தன்னை சந்திக்க வருமாறு Whitney அந்த மாணவிக்கு செய்தி அனுப்ப, அவள் மறுத்திருக்கிறாள்.

அதனால் அவளது தாய் வீட்டை விட்டு வெளியே சென்றதும் அவளைச் சென்று சந்தித்து தனது காருக்குள் அழைத்து அங்கு அவளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள் Whitney.

ஆசிரியை தனக்கு அவளுடைய அரை நிர்வாண புகைப்படங்களையும் வீடியோக்களையும் அனுப்பியதோடு, தன்னையும் அதேபோல் அரை நிர்வாணமாக படங்களும் வீடியோக்களும் அனுப்புமாறு கேட்டதாக அந்த மாணவி பொலிசாரிடம் தெரிவித்தாள்.

17 வயதுக்கு கீழுள்ள சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக Whitney மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பள்ளிகளுக்கு அருகேயே செல்லக்கூடாதென்றும், இன்டர்நெட்டை பயன்படுத்தக்கூடாது என்றும் Whitneyக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கு அனுப்பும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் அத்து மீறுவது அதிகரித்து வருவது அமெரிக்க பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...