அமெரிக்காவில் மாபெரும் தீ விபத்து: 70 இடங்களில் கேஸ் பைப்லைன் வெடித்தது

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் Lawrence நகரில் 70 இடங்களில் கேஸ் பைப்லைன் வெடித்ததில் குறைந்தது 39 வீடுகளில் தீப்பிடித்தது, ஒருவர் பலியானார், 10 பேர் காயமடைந்தனர்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கேஸ் பைப்லைன் வெடித்ததில் அந்த நிறுவனத்தின் கேஸ் இணைப்பை பயன்படுத்தும் 39 வீடுகள் தீப்பற்றி எரிந்தன.

தீயில் ஒரு வீடு வெடித்துச் சிதறியதில், அந்த வீட்டின் புகை போக்கி ஒரு கார் மீது போய் விழுந்தது.

இதில் கார் நசுங்கியதில் அந்தக் காரில் இருந்த Leonel Rondon (18) என்னும் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

50 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Lawrence நகரில் கேஸ் சப்ளை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் அங்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers