மனைவி உட்பட 5 பேரை சுட்டுக் கொன்ற கணவன்! அதன் பின் எடுத்த விபரீத முடிவு

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்கவில் மனைவி உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்ற கணவன், அதன் பின் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பேக்கர்ஸ்பீல்ட் பகுதியில், நேற்று முன் தினம் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் துப்பாக்கியுடன் வந்த நபர், தமது மனைவியை திடீரென்று துப்பாக்கியால் சுட்டான்.

அதன் பின் அங்கிருந்த டிரக்கிங் கம்பெனியைச் சேர்ந்த ஒருவரையும், அந்நிறுவனத்தின் அருகே நின்று கொண்டிருந்தவரையும் துப்பாக்கியால் சுட்டான். இதனால் அவர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் இருவரையும் சுட்டுக் கொன்ற அவன், காவலர்களால் சுற்றிவளைக்கப்பட்டதும் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

தமது மனைவியைத் தவிர சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேருடன் அவனுக்கு என்ன உறவு என தெளிவாகாததால் பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...