பின் லேடனை கொன்று மோசமான செயலை செய்துவிட்டேன்: அமெரிக்க கடற்படை வீரர் புலம்பல்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அல்கொய்தா அமைப்பின் தலைவர் பின் லேடனை கொன்று மோசமான ஒரு செயலை செய்துவிட்டேன் என, முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ஒரு தளமாக விளங்கி வந்த இரட்டை கோபுரங்கள், கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதியன்று அல்கொய்தா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளால் ஆளில்லா விமானம் மூலம் தகர்க்கப்பட்டது.

இதில் ஏராளமான அமெரிக்க பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர்.

ஒட்டுமொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சம்பவத்திற்கு, பலி வாங்கும் விதமாக அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011, மே 2-ம் தேதியன்று அமெரிக்க வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் இரட்டை கோபுர தாக்குதலை நினைவு கூறும் விதமாக பிரித்தானியாவை சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பின் லேடனை சுட்டு வீழ்த்திய Seal Robert O’Neill அதில் கலந்து கொண்டு சிறப்பு பேட்டியளித்திருந்தார்.

நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த அவர், பாகிஸ்தானின் Abbottabad-ல் பின் லேடனை சுட்டு வீழ்த்திய சம்பவம் தான் என் வாழ்க்கையில் நான் செய்த மோசமான ஒரு விடயம் என தெரிவித்தார். மேலும், பின் லேடனின் சிறுவயது மகனை நினைவு கூர்ந்த அவர், நானும் ஒரு தந்தை தான் என வேதனை தெரிவித்தார்.

முன்னதாக கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள O’Neill தற்பொழுது எழுத்தாளராகவும், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரையும் ஆற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers