மரணம்தான் என்று முடிவாகிவிட்டால், ஓடினாலும் பயனில்லை: ஃப்ளாரன்ஸ் புயலுக்கு அஞ்சாத ஒரு கூட்டம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் கரோலினா மாகாணங்களை ஃப்ளாரன்ஸ் புயல் நெருங்கி வருவதையடுத்து வட கரோலினாவைச் சேர்ந்தவர்கள் பயந்து இப்போதே அத்தியாவசியப் பொருட்களை வாங்க சண்டையிடும் நிலையில், இன்னொரு பக்கம் மரணம் வருகிறது என்றால் ஓடினாலும் பயனில்லை என்று கூறி புயலுக்கு அஞ்சாத ஒரு கூட்டம் தென் கரோலினாவின் St Helena தீவை விட்டு நகரமாட்டோம் என அடம்பிடித்து அங்கேயே உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஃப்ளாரன்ஸ் புயல் நெருங்கி வருவதையடுத்து அதன் பாதையில் இருக்க வேண்டாம் என்பதற்காக சுமார் 1.7 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதனால் வட கரோலினாவைச் சேர்ந்தவர்கள் உணவு, தண்ணீர், டாய்லெட் பேப்பர் உட்பட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்க முண்டியடிக்கின்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

இதனால் பொலிசார் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் தென் கரோலினாவின் St Helena தீவினர் என்ன நடந்தாலும் தீவை விட்டு நகர மாட்டோம் என அங்கேயே உட்கார்ந்திருக்கிறார்கள்.

எங்கள் அம்மாக்களும் பாட்டிகளும் இந்த இடத்தை விட்டு நகரவில்லை என்றால், பிள்ளைகளும் நகரமாட்டோம் என்கிறார் Dais (29).

இர்மா புயலும் மேத்யூ சூறாவளியும் வந்தபோதும் எப்படி சமாளித்தார்கள் என்பதை நினைவு கூறுகிறார் அவர். மரணம்தான் என்று முடிவாகிவிட்டால், ஓடினாலும் பயனில்லை என்கிறார்கள் St Helena தீவினர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers