தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மலைக்க வைக்கும் கட்டணம் வசூலித்த டிரம்ப்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள 70 ஆயிரம் டொலர்கள் கட்டணமாக வசூலித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள ஜனாதிபதி டிரம்புக்கு சொந்தமான நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் நிதிதிரட்டுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதில் டிரம்புடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள 70 ஆயிரம் டொலர் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மட்டுமின்றி டிரம்புடன் வட்டமேஜையில் அமரும் விருந்தினர்கள் 100,000 டொலர் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவித்திருந்தனர்.

மேலும் டிரம்புடன் உணவருந்த 35,000 டொலர் கட்டணம் எனவும் அறிவித்துள்ளனர். குறித்த நிதியானது 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக செலவிடப்படும் என அறிவித்துள்ளனர்.

பொதுவாக இதுபோன்ற நிதி திரட்டும் நிகழ்ச்சிகளுக்கான விலை பட்டியலைவிடவும் இது மிக அதிகம் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் தேர்தல் நிதி திரட்டும் பொருட்டு தன்னுடன் உணவருந்த 100,000 டொலர் கட்டணம் வசூலித்திருந்தார்.

ஆனால் 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக நிதி திரட்டிய ஒபாமா தமது விருந்தினர்களிடம் இருந்து தலா 35,800 டொலர் மட்டுமே வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...