15 நிமிடங்களில் அடுத்தடுத்து ஐந்து கொலைகள்.. கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்: திடுக்கிடும் சம்பவம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் நபர் ஒருவர் தனது மனைவி உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்ஃபீல்டு பகுதியில் வசித்த நபர் ஒருவர், தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

பின்னர் லொறி நிறுவனத்தின் ஊழியர் ஒருவரையும் சுட்டுவிட்டு, மற்றொரு ஊழியரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது வீடு அருகே மேலும் இருவரை கண்மூடித்தனமாக சுட்டுள்ளார் அந்நபர்.

அதன் பின்னர், கார் ஒன்றை வழிமறித்து அதில் குழந்தையுடன் இருந்த பெண்ணை மிரட்டியுள்ளார். அப்பெண் காரை விட்டு இறங்கியபோது குறித்த நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த கொலைகள் அனைத்து 10 முதல் 15 நிமிடங்களில் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers