உலகமே எதிர்பார்த்த புதிய ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள்! அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் தயாரிப்புகளை அமெரிக்காவின் குபெர்டினோவில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் பார்க் வளாகத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் இன்று நடந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் மூன்று புதிய ஐபோன்கள், புதிய வெர்ஷன் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் நடந்த இரண்டாவது நிகழ்ச்சி இதுவாகும்

இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்.

ஐபோன் XS

99,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 64 GB, 256 GB, 512 GB என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். இதற்கு முன்னர் வெளியான ஐபோன் X-ற்கும் இந்த இரண்டு புதிய ஐபோன்களுக்கும் பெரிய அளவில் ஏதும் வித்தியசமாமில்லை.

ஐபோன் XS மேக்ஸ்

இதுவரை வெளியான ஐபோன்களிலேயே மிகவும் பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது இதுதான். இதுவும் 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளேவைக் கொண்டது.

109,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 28-ஆம் திகதி முதல் விற்பனை தொடங்குகிறது. 5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக காட்சிகளைத் தரும். IP68 சர்டிபிகேட் வாட்டர் ப்ரூபாக இருக்கும்

ஐபோன் XR

64 GB, 128 GB, 256 GB என மூன்று மாடல்களில் கிடைக்கும். இதன் விலை 76,900 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதன் ப்ரீ ஆர்டர் அக்டோபர் 19 அன்று தொடங்குகிறது. விற்பனை அக்டோபர் 26-ல் இருந்து தொடங்கும்.

ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது. 6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers