தம்பதிகளுக்குள் நுழைந்த இரண்டாவது பெண்: நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் ஒரு பெண்ணைத் தங்கள் குடும்பத்துக்குள் அனுமதித்தனர்.

அவர் இப்போது அவர்களில் ஒருவராக அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் இரண்டாவது தாயாக மாறிவிட்டார்.

பீனிக்சை சேர்ந்த Kori Baker (27) Katarina Kearnsஐ (26) இன்ஸ்டாகிராமில் சந்தித்தார்.

தனது கணவரான Stephen Pape (28)உடன் Katarinaவை சந்தித்தபோது மூவருக்கும் ஒருவரையொருவர் மிகவும் பிடித்துப்போயிற்று.

அனைவரும் சேர்ந்து வாழ்வது எனவும் வேறு யாருடனும் டேட்டிங் செல்வதில்லை எனவும் முடிவெடுத்த அந்த மூவரும் ஒரே குடும்பமாக வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

Stephen - Kori தம்பதியினரின் குழந்தைகளும் Katarinaவை தங்கள் இரண்டாவது தாயாக ஏற்றுக் கொண்டனர்.

Katarinaவுடனும் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டு இன்னும் குடும்பத்தை பெரிதாக்க அவர்கள் மூவரும் திட்டமிட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் பொறாமையால் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் பின்னர் ஒருவரோடொருவர் மனம் விட்டு பேசி பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

டேட்டிங் ஆனாலும், வார இறுதி ட்ரிப்கள் என்றாலும் ஏன் பாலுறவானாலும் நாங்கள் மூவரும் சேர்ந்தே பகிர்ந்து கொள்வோம் என்கிறார்கள் இந்த அதிசய தம்பதியினர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers