அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற இந்தியர்கள் உட்பட 19 பேர் கைது

Report Print Kabilan in அமெரிக்கா

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோத முறையில் படகில் சென்ற 2 இந்தியர்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க கடற்பகுதிக்குள் பங்கா வகை படகு ஒன்று பலரை ஏற்றிக்கொண்டு நுழைந்தது. மெக்சிகோவில் இருந்து வந்த இந்த படகை, வான் மற்றும் கடல்வழி நடவடிக்கைகளுக்கான அமெரிக்க விமானம் ஒன்று கண்டறிந்தது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், உடனடியாக குறித்த படகு பாயிண்ட் லோமா பகுதியில் இருந்து 24 கிலோ மீற்றர் மேற்கே தடுத்து நிறுத்தப்பட்டது.

அதில் பயணம் செய்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் இந்தியர்கள் என்று தெரிய வந்தது. மேலும், இருவர் சந்தேகத்திற்குரிய வகையிலான கடத்தல்காரர்கள் என்றும் கண்டறியப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவில் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான இந்தியர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்