அமெரிக்க சூப்பர் மார்க்கட் எடுக்கும் அதிரடி நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in அமெரிக்கா

அமெரிக்காவின் பிரபல சூப்பர் மாக்கட் ஆன Kroger ஆனது 2025 அளவில் எல்லா பிளாஸ்டிக் பைகளையும் தடைசெய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பற்றி கூறுகையில், எதிர்காலத்தில் பைகளின் ஒருமுறை பாவனையிலிருந்து விலகி திரும்பத் திரும்ப பாவிக்கும் பைகளுக்கான அணுகுமுறையாக இருக்கும், இதன் மூலம் வருடாந்தம் 123 மில்லியன் பவுண்டு குப்பைகளை குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்புவதை தடைசெய்ய முடியும் என சொல்லப்படுகிறது.

தற்போது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்தப் பைகளை ஒவ்வொன்றும் ஒரு டொரிலிருந்து விற்பனை செய்யப்படுகின்றது. இதன் இருப்பை வருங்காலங்களில் அதிகரிக்கச்செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர்கள் இப்போதும் காகிதப் பைகளைக் கேட்டு வாங்கும் தன்மையுடையவர்களாகக் காணப்படுகின்றனர்.

மேலும் பெருட்களை பொதிசெய்யப் பயன்படுத்தப்படும் மற்றும் இறைச்சியை விற்பனை செய்யப் பயன்படுத்தப்படும் பைகளையும் தடைசெய்யும் நோக்குடன் செயற்பட்டுவருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்