அமெரிக்காவில் கொலைவெறி தாக்குதல்! பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீடியோ விளையாட்டு போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட பொழுதுபோக்கு வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு வளாகம் ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுவரை அதிகாரிகள் தரப்பு இதை உறுதி செய்யவில்லை. இருப்பினும் கொல்லப்பட்டவர்களின் எண்னிக்கை அதிகமிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற Jacksonville Landing பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பொலிஸ் தரப்பு எச்சரித்துள்ளது.

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் வேறு எவரேனும் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் வேறு எவரேனும் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர் எனவும், தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக பார்வையாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபர் பின்னர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Jacksonville Landing பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கு வளாகத்தில் Madden NFL இணையம் வாயிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தது.

குறித்த போட்டியில் தோல்வியுற்ற இளைஞர் ஒருவர் எதிரணியினரை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மேலதிக தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்