14 வயது மாணவனுடன் பாலியல் உறவு! கால்பந்து பயிற்சியாளரின் மனைவி செய்த செயல்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் 14 வயது மாணவனுடன் 6 மாதமாக உறவு வைத்துக்கொண்ட கால்பந்து பயிற்சியாளரின் மனைவி வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் Tennessee பகுதியை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் Justin (38) அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் உதவி பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

அவருடைய அணியில் இருக்கும் இரண்டு மாணவர்கள், வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து அவர்கள் இரண்டு பேரையும் தன்னுடைய வீட்டிலேயே பயிற்சியாளர் தங்கவைத்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவரது மனைவி Kelsey McCarter (28), நேரம் கிடைக்கும் போதெல்லாம் 15 வயது மாணவனை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

6 மாதங்களாக ரகசியமாக நடந்து வந்த இந்த செயல், கடந்த 2015-ம் ஆண்டு Justin பார்வைக்கு செல்ல, ஆத்திரமடைந்த அவர் சம்மந்தப்பட்ட மாணவனை கால்பந்து அணியிலிருந்து நீக்கியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, Kelsey-ஐ கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தான் செய்த தவறுகளை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் மாணாவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், Kelsey தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை பள்ளி மாணவர்கள் பலருக்கு அனுப்பியதோடு மட்டுமின்றி, மாணவர்கள் 6 பேரை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த வழக்கு சம்மந்தமாக Kelsey ஏற்கனவே 3 ஆண்டுகள் சிறையில் இருந்துவரும் நிலையில் தற்போது சம்மந்தப்பட்ட சிறுவனின் தாய், தன்னுடைய குடும்பத்தையே அந்த பெண் நாசம் செய்துவிட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக £1.5மில்லியன் டாலர் வழங்க வேண்டும் எனவும் புதிய வழக்கு ஒன்றினை தொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், குற்றவாளி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்