மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிளேபாய் மொடல்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் ‘Playboy' இதழின் மொடல் அழகி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா கார்லின் கிராப்ட்(36). இவர் பிரபல ‘Playboy' இதழின் முன்னாள் மொடலாக இருந்தவர்.

கிறிஸ்டினா தனது வீட்டில் கொள்ளை நடந்ததாக பொலிசில் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கொள்ளை போன நகை உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடித்த பொலிசார், அவற்றை கொடுக்க கிறிஸ்டினா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது கிறிஸ்டினா, வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்துள்ளதைப் பார்த்து பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் அவரது உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் கிறிஸ்டினா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிறிஸ்டினா தனது ஆண் நண்பர் ஒருவருடன், கடந்த 9 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும், சம்பவம் நடந்த அன்று அவரது ஆண் நண்பரும் வீட்டில் இருந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, அவர் கிறிஸ்டினாவை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்