புத்தர் சிலையால் நடந்த மாற்றங்கள்

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவின் ஓக்லாந்து நகரை சேர்ந்த நபர் செய்த செயலால் அப்பகுதி குற்றங்கள் குறைந்துள்ளன.

ஓக்லாந்தின் பதினோராவது அவென்யூ மற்ற இடங்களை விட வன்முறை அதிகம் நிறைந்ததாக கருதப்பட்டது.

இங்கு சட்டத்திற்கு புறம்பான போதைப்பொருள் கடத்தல், கொள்ளை போன்றவை நடந்து வந்தன.

இப்பகுதியில் வசிக்கும் டான் ஸ்டீவன்சன் என்பவர், ஒருநாள் புத்தர் சிலையை கொண்டு வந்து மரத்தடியில் வைத்தார்.

இதை பார்த்த பலரும் குப்பைகளை போடுவதை நிறுத்திக் கொண்டதுடன், தாங்களாகவே சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.

வியட்நாமை சேர்ந்தவர்கள் இனிப்புகள், பழங்களை வைக்க ஆரம்பித்தனர், சிலர் பூக்களால் அலங்கரித்தனர்.

அப்பகுதியில் வசித்த குற்றவாளிகள் வேறு இடங்களுக்கு குடியேற தொடங்கினர்.

இதுகுறித்து டான் ஸ்டீவன்சன் கூறுகையில், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நினைத்தேன், அப்போது புத்தர் சிலையை வைப்பது என்ற திட்டம் தோன்றியது.

நானே நினைத்து பார்க்காத அளவுக்கு மாற்றங்கள் நடந்தன.

2012 முதல் 2014வரை 82 சதவிகித குற்றங்கள் குறைந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதி மக்கள் சந்திக்கும் இடமாகவும் மாறிவிட்டது, சமூகவலைத்தளங்களிலும் இது பிரபலம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்