சாலையில் பயணித்தது ஆவியா? அமானுஷ்ய ஒளியைக் கண்டு அதிர்ந்த ஓட்டுநர் : திகில் வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க சாலை ஒன்றில் பயணித்த ஒருவர் எதிரே வேகமாக வரும் ஒளியைக் கண்டு அது ஒரு மோட்டார் சைக்கிளாக இருக்கும் என்ற எண்ணத்தில் பார்த்தபோது அது மோட்டார் சைக்கிள் அல்ல என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

Andrew Hearn (22) அமெரிக்காவின் Maryland-வில் உள்ள தனது நண்பர் வீட்டிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அதிகாலை 3.45 மணியளவில் தன்னை நோக்கி ஒரு பிரகாசமான ஒளிப் பந்து முன்னேறி வருவதைக் கவனித்தார்.

தன்னைக் கடந்து சென்றது ஒரு வாகனம் அல்ல என்பதை அறிந்த Andrew, காரின் வேகத்தைக் குறைத்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது அந்த சாலையில் அவரது கார் தவிர எந்த வாகனங்களும் இல்லை என்பதை அறிந்து திடுக்கிட்டார்.

அடிக்கடி விபத்து நடக்கும் அந்த சாலையில், காரை திருப்பிக் கொண்டு போய் வேறு வாகனங்கள் செல்கின்றனவா என்பதை பார்த்தபோது வேறு வாகனங்கள் எதுவும் இல்லை என்பது உறுதியாயிற்று.

தனது கெமராவில் அதை படம் பிடித்திருந்த Andrew அதை மீண்டும் இயக்கிப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தார்.

Andrew ஏற்கனவே இது போன்ற அமானுஷ்ய விடயங்களை வாழ்வில் சந்தித்திருப்பதால் அவர் பார்த்தது ஒரு ஆவியாகத்தான் இருக்கும் என்கிறார் அவர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers