புற்றுநோயால் அவதிப்பட்டுவரும் சிறுமியை வியப்பில் ஆழ்த்திய பிரபல ஹாலிவுட் நடிகர்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் புற்றுநோயால் அவதிக்குள்ளாகிவரும் சிறுமியின் பிறந்த நாளுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் வாழ்த்து அட்டை அனுப்பி கனவை நனவாக்கியுள்ளார்.

தென்மேற்கு மத்திய அமெரிக்க மாகாணமான ஓக்லஹோமாவில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 12 வயதான ஆஸ்பென் கெல்லி.

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே சிறுமி ஆஸ்பென் கெல்லி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் தமது 13-வது பிறந்த நாளுக்காக உலகெங்கிலும் இருந்து வாழ்த்து அட்டைகளை பெற வேண்டும் என விரும்பிய அவர்,

தமது தாயாரின் உதவியுடன் பேஸ்புக் பக்கத்தில், குறிப்பொன்றை பதிவேற்றியுள்ளார். அதில் உங்கள் வாழ்த்து அட்டைகளால் நான் உலகைக் காண வேண்டும், உதவுங்கள் என பதிவிட்டிருந்தார்.

மட்டுமின்றி அமெரிக்காவில் குடியிருக்கும் மக்களும் உலகின் பிற நாடுகளில் குடியிருப்போரும் தங்களால் இயன்ற வாழ்த்து அட்டைகளை அனுப்ப அவர் அதில் கோரியுள்ளார்.

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ் கிரேக்கத்தில் இருந்து தமது கைப்பட எழுதிய வாழ்த்து அட்டை ஒன்றை சிறுமி ஆஸ்பென் கெல்லி பெயரில் அனுப்பி வைத்துள்ளார்.

அதில் உனது 13-வது பிறந்த நாள் நேரத்தில் இந்த வாழ்த்து அட்டை வந்து சேரும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறுமி கெல்லியின் பேஸ்புக் பதிவை கவனித்த சுமார் 1,000 பேர் வாழ்த்து அட்டைகளை அனுப்பியுள்ளனர்.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இருந்து மட்டுமின்றி 49 வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வாழ்த்து அட்டைகள் குவிந்துள்ளதாக சிறுமி ஆஸ்பெனின் தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...