நிலை தடுமாறி விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்: அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் திடீரென நிலை தடுமாறியதால் தரையில் விழுந்து முழுவதும் உடைந்து நொறுங்கிய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் Arkansas பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓய்வு பெற்ற William 'Bill' Denino என்ற அதிகாரி தரையிலிருந்து ஹெலிகாப்டர் ஒன்றினை எடுக்க முற்பட்டுள்ளார். ஆனால் அதிகமான காற்றின் காரணமாக ஹெலிகாப்டர் நிலை தடுமாறியுள்ளது.

இதற்கிடையில் சத்தம் கேட்டு ஓடி வந்த ஒரு அதிகாரி, உடனே ஹெலிகாப்டரை தரையிறக்குமாறு அறிவுறுத்துகிறார். அதன்படி தரையிறக்க முற்படும் போது, ஹெலிகாப்டரில் இறக்கை தடுமாறி தரையில் மோதி சிதறுகிறது.

இதனையடுத்து வேகமாக சென்ற அந்த நபர், சம்பவத்தில் படுகாயமடைந்த William-ஐ மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் ஹெலிகாப்டரில் அமர்ந்திருந்த மற்றொரு நபர் காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பினார்.

இந்த வீடியோ காட்சியினை Little Rock பொலிஸ் அதிகாரிகள் தங்களுடைய அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...